ஒரு சமயம்..யுதிஷ்டிரரும்,திரௌபதியும் ஒரு மண்டபத்தில் தனித்து இருந்த போது..நள்ளிரவில்..ஒரு அந்தணன்..'என் பசுக்களை யாரோ களவாடிவிட்டார்கள்..'என் கூவியவாறு அம்மண்டபம் நோக்கி ஒட..அவனை தடுத்த அர்ச்சுனன்..வில்லையும்..அம்பையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய்..திருடர்களைப் பிடித்து..பசுக்களை மீட்டு அந்தணனிடம் ஒப்படத்தான்.
யுதிஷ்டிரரும்,திரௌபதியும்..இருந்த மண்டபத்தருகே சென்றபின்..உடன்படிக்கையை மீறிவிட்டதாக..அர்ச்சுனன் எண்ணினான்.யுதிஷ்டிரர் தடுத்தும்..ஒரு ஆண்டு நாட்டைவிட்டு விலகி இருக்க தீர்மானித்தான்.புண்ணியதலங்கள் பலவற்றிற்குச் சென்றான்.தென்திசை வந்து கோதாவரியிலும், காவிரியிலும் புனித நீராடினான்.
பின், துவாரகை சென்று..பிரபாசா என்னும் தலத்தை அடைந்தான்.கிருஷ்ணரின் தங்கை சுபத்திரையை மணக்கும் ஆசை அவனுக்கு இருந்தது.அதற்கு பலராமன் சம்மதிக்காவிடினும்..கண்ணன் உதவி புரிய முன் வந்தார்.
துறவிபோல அர்ச்சுனன்..வேடம் பூண்டு வர..பலராமன் துறவியை வணங்கி..சுபத்திரையை அவருக்கு பணிவிடை செய்ய பணித்தான்.வந்திருப்பது அர்ச்சுனன் என்பதை அறிந்த அவளும்..அவன் மீது காதல் கொண்டாள்.இதை அறிந்த பலராமர்..அர்ச்சுனனுடன் போரிட முயல..கண்ணன் பலராமன் சினத்தை தணித்தார்.
அர்ச்சுனன்..சுபத்திரை திருமணம் இனிதே முடிய..அர்ச்சுனன்..இந்திரபிரஸ்தம் திரும்பினான்.
சில காலத்திற்குப்பின்..சுபத்திரை..அபிமன்யுவை பெற்றாள்.திரௌபதி..தன் ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து பிள்ளைகளைப் பெற்றாள்.
யமுனை நதிக்கரையில்..காண்டவ வனம் ஒன்று இருந்தது.இந்த பயங்கர காட்டில்..இரக்கமில்லா அரக்கர்களும்..கொடிய விலங்குகளும்,விஷப்பாம்புகளும் இருந்தன.அக்கினித்தேவன் அக்காட்டை அழிக்க நினைத்து தோற்றான்..அவன்..அர்ச்சுனனிடமும்..கண்ணனிடம் வந்து முறையிட்டான்.காட்டை அழிக்க தேவையான கருவிகளையும் அவர்களுக்கு அளித்தான்.அர்ச்சுனனுக்கு..நான்கு வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட தெய்வீக தேர் கிடைத்தது.அதில்..வானரக் கொடி பறந்தது.மேலும்..காண்டீபம் என்னும் புகழ் வாய்ந்த வில்லும்..இரண்டு அம்பறாத்தூணிகளும் கிடைத்தன.
கண்ணனுக்கு..சுதர்சனம் என்ற சக்கர ஆயுதமும்..கௌமோதகி என்னும்..கதாயுதமும் கிடைத்தன.
இவற்றின் உதவியால்...காண்டவ வனம்..தீப் பற்றி..எரிந்தது.அக்காட்டில் இருந்த தீயவை அழிந்தன.அக்கினித்தேவன் மகிழ்ந்தான்.
(ஆதி பருவம் முற்றிற்று இனி சபாபருவம்)
Saturday, February 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அபிமன்யூ - சுந்தரி கல்யாணமும் வருமா ?
மகாபாரதம் கதையாடல் முடிந்ததும், மங்கள முடிவாக, அதனைக் கூறி முடிப்பார்கள். சின்ன வயதில் காது கொடுத்து கேட்டது.
ஒரு தொடரில் பின்னால் வருவதை முன்னால் கேட்டால் என்னால் சொல்லமுடியாது
:-))))
நல்ல தொடர்....
தொடர்ந்து எழுதுங்கள்..
நன்றி அடியார்
Post a Comment