Sunday, January 25, 2009

7. அம்பையின் தவம்

சால்வனை சந்தித்த அம்பை..'மன்னா..நாம் முன்னரே உள்ளத்தால் கலந்துள்ளோம்..இப்போது முறைப்படி மணம் செய்துக்கொள்வோம்' என்றாள்.

அதற்கு சால்வன் 'பெண்ணே..மன்னர் பலர் இருந்த அவையிலிருந்து பலந்தமாக பீஷ்மர் உன்னைக் கவர்ந்து சென்றார்.மற்றவரால் கவரப்பட்டு..பின் அவர் வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன்.நீ திரும்ப செல்' என்றான்.

சால்வனின் இந்த முடிவினால்..என்ன செய்வது என்று அறியாத அம்பை..மீண்டும் அஸ்தினாபுரம் சென்றாள்..பீஷ்மரை நோக்கி..'சுயம்வர மண்டபத்திலிருந்து என்னை கவர்ந்து வந்த நீரே தர்மசாத்திரப் படிஎன்னை மணம் புரிய வேண்டும்' என்றாள்.

ஆனால்..பீஷ்மரோ 'நான் பிரமசரிய விரதம் பூண்டுள்ளேன்' எனக்கூறி மறுத்தார்.

மாறி மாறி கண்ணீருடன்..சால்வனிடமும், பீஷ்மரிடமும் முறையிட்டபடியே ஆறு வருடங்களைக் கழித்தாள் அம்பை.பின் இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்..கட்டை விரலை ஊன்றி நின்று..கடுந் தவம் செய்தாள் பன்னிரெண்டு ஆண்டுகள்.

முருகப்பெருமான்..அவளுக்குக் காட்சி அளித்து..அழகிய மாலை ஒன்றை கொடுத்து..'இனி உன் துன்பம் தொலையும்.அழகிய இந்த தாமரை மாலையை அணிபவனால்..பீஷ்மர் மரணமடைவார்' என்று கூறி மறைந்தார்.

பின் அம்பை..பல அரசர்களிடம் சென்று 'இந்த மாலை அணிபவர் பீஷ்மரைக் கொல்லும் வல்லமை பெறுவார்..யார் பீஷ்மரைக் கொல்கிறார்களோ..அவருக்கு நான் மனைவி ஆவேன்..யாராவது இம்மாலையை வாங்கிக் கொள்ளுங்கள்' என வேண்டினாள்.

பீஷ்மரின் பேராற்றலுக்கு பயந்து யாரும் முன் வரா நிலையில்...ஆண்டுகள் பல கடந்தன.ஆனாலும் அம்பை தன் முயற்சியைக் கைவிடவில்லை.பாஞ்சால அரசன் துருபதனை சந்தித்து'துயரக்கடலில் மூழ்கி யுள்ள..என்னை கை தூக்கி விடுங்கள்' என்றாள்.

அவனும்..பீஷ்மருடன் போராடும் ஆற்றல் எனக்கில்லை' என்று ஒதுங்கினான்.இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில்..அம்மாலையை அம்மன்னனின் மாளிகையில் போட்டுவிட்டு..'பெண்ணே!மாலை எடுத்துச் செல்' என்று கூறிய மன்னனின் வார்த்தைகளையும் புறக்கணித்து வெளியேறினாள் அம்பை.

துருபதனும்..அம்மாலையை காத்து வந்தான்.அம்பை பின் ஒரு காட்டிற்குச் சென்று..அங்கு தவமிருந்த ஒரு முனிவரை சந்தித்தாள்.அவர்..அவளை பரசுராமரைப் பார்க்கச் சொன்னார்.

அம்பையும்..பரசுராமரை சந்தித்து..தன் நிலமையை சொன்னாள்.பரசுராமர் பீஷ்மரை சந்தித்து..அம்பையை மணக்கச்சொல்ல பீஷ்மர் இணங்கவில்லை.ஆகவே இருவருக்குள் போர் மூண்டது.

இருவரும் வல்லமை மிக்கவர்கள் ஆனதால்..யார் வெற்றிப் பெறுவார்..எனக் கூற இயலாத நிலையில்..பரசுராமர் விலகிச் சென்றார்.

மீண்டும்..தோல்வியுற்ற.அம்பை..சிவனை நோக்கி தவமிருந்தாள்.சிவன் அவளுக்கு காட்சி அளித்து'பெண்ணே! உன் கோரிக்கை இப்பிறவியில் நிறைவேறாது.அடுத்த பிறவியில் அது நடக்கும்..உன்னைக் காரணமாகக் கொண்டு பீஷ்மருக்கு மரணம் எற்படும்'என்றார்

4 comments:

சி தயாளன் said...

தொடர்ந்து எழுதுங்கள்..எளிமையாகவும் அழகாகவும் இருக்கின்றது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ’டொன்’ லீ

மணிகண்டன் said...

இது மாதிரி எதாவது புதுசா எழுத ஆரம்பிச்சா உங்களோட மெயின் பதிவுல சொல்லுங்க சார்.

அம்பா முருகபெருமாள் கிட்ட தவம் செஞ்சது, அவர் மாலை கொடுத்தது - இது ரெண்டும் எனக்கு புதுசு. இது வரைக்கும் எந்த உபன்யாசத்துலயும் கேட்டது கிடையாது.

மஹாபாரதம் எனக்கு ரொம்ப படிக்க புடிக்கும். கலக்குங்க.. இனிமே டெய்லி இதுக்கு வந்து படிக்கறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணி

Post a Comment