Monday, January 5, 2009

வாருங்கள்...வணக்கம்...

உலகம் போற்றும் இதிகாசங்கள் ராமாயாணமும்,மகாபாரதமும்.

ராமாயணத்தைவிட மகாபாரதம் பெரியது.ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட இதில் மனித வாழ்வில் எழும் சிக்கல்களும் உண்டு...அதைத் தீர்க்கும் வழிகளும் உண்டு.

இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு என்று கூறப்படுகிறது.

மகாபாரதப்போரில்..ஈடுபட்ட வீரர்கள் எண்ணிக்கை முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுனூறு.பதினெட்டு நாட்கள் போருக்குப்பின்...10 பேர் தவிர..அனைவரும் மாண்டனர்..

இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதை படிக்க வேண்டும் என்பதில்லை.அனைவரும் படிக்கலாம்.தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு...அற்றதை விட்டு விடலாம்.

இப்பதிவின் நோக்கமே ..எளிமையாக...மகாபாரதக் கதையை சொல்ல வேண்டும் என்பதுதான்.

அனைத்து பதிவர்கள் ஆதரவையும்...அனைத்து..தமிழ் திரட்டிகளின் ஆதரவையும் வேண்டுகிறேன்...

10 comments:

கோவி.கண்ணன் said...

இது எப்போ ஆரம்பித்தீர்கள் என்றே கவனிக்கவில்லை.

நல்ல தொடக்கம் ! வாழ்த்துகள் !

கோவி.கண்ணன் said...

//இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு என்று கூறப்படுகிறது.//

:)) உண்மைதான். ஆனால் யாரும் நம்ப மாட்டார்கள் !

//இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதை படிக்க வேண்டும் என்பதில்லை.அனைவரும் படிக்கலாம்.தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு...அற்றதை விட்டு விடலாம். //

அது.........!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி..கோவி

மடல்காரன்_MadalKaran said...

உங்களின் இந்த வலைப் பதிவு அருமை. வரும் சந்ததியினருக்கு மிக எளிதாக புரியும் வண்ணம் எழுதியுள்ளீர்கள்.

அன்புடன், கி.பாலு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மடல்காரன்_MadalKaran

சி தயாளன் said...

இன்று தான் கவனித்தேன்...நம்பிக்கை என்பதை தாண்டி என்னைக் கவர்ந்த கதை....படமாக எடுக்கபட வேண்டுமென்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படும் கதை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ’டொன்’ லீ

ப்ரியா கதிரவன் said...

இன்றைக்கு தான் உங்கள் பதிவின் அறிமுகம் கிடைத்தது.
ரொம்ப மகிழ்ச்சி. படிக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ப்ரியா

ரங்கநாத் ஜ. said...

மகாபாரதப்போரில்..ஈடுபட்ட வீரர்கள் எண்ணிக்கை முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுனூறு.பதினெட்டு நாட்கள் போருக்குப்பின்...10 பேர் தவிர..அனைவரும் மாண்டனர்..

வணக்கம் என் பெயர் ரங்கநாத் ஜ. நாம் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர். நான் ஆன்மீக ஈடுபாடு அதிகம் உண்டு. நான் Deaf and Dumpயிடம் பகவத் கீதை உதாரண விளக்கங்கள் மற்றும் ஆன்மீக சேவைகள் சொல்லி இருந்தோம்! நாம் உங்களிடம் புதிய அறிமுக நண்பராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என எனக்கும் ஆசை உண்டு. என் இமெயில் j.ranganath6@gmail.com. தாங்கள் வைப்சைட் மகாபாரதம் பெரிய கதை மற்றும் சிறு முக்கிய குறிப்புகள் நாம் வியப்புகள் அடைந்தோம்!
அன்புடன்
ரங்கநாத் ஜ.

Post a Comment