Monday, January 26, 2009

8- சிகண்டி

மறுபிறவி எடுக்க நினைத்த அம்பை உடனே தீயில் விழுந்து மாண்டு போனாள்.துருபதனின் மகளாக பிறந்தாள்.சிகண்டி என்ற பெயர் தாங்கினாள்..ஒருநாள் அரண்மணை வாயிலில் மாட்டப்பட்டிருந்த ..அந்த அழகிய தாமரை மாலையைக் கண்டு..அதை எடுத்து அணிந்துக் கொண்டாள்.இதை அறிந்த துருபதன்..பீஷ்மருக்கு பயந்து..தன் மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினான்.

பின் சிகண்டி தவ வாழ்க்கை மேற்கொண்டாள்.இஷிகர் என்னும் முனிவருக்கு பணிவிடை செய்யும் போது அம்முனிவர்..'கங்கை ஆற்றின் உற்பத்தி இடத்தில்..விபஜனம்..என்னும் விழா நடை பெறப்போகிறது..அதற்கு வரும் தும்புரு என்னும் மன்னனுக்கு பணிவிடை செய்தால்..உன் எண்ணம் ஈடேறும்'என்றார்.

சிகண்டி அங்குப் போனாள்.அங்கு பல கந்தர்வர்கள் இருந்தனர்.அவர்களில் ஒருவன் சிகண்டியைப்பார்த்து 'நாம் இருவரும் உருவத்தை மாற்றிக்கொள்ளலாமா? அதாவது..உன் பெண் வடிவத்தை எனக்குத் தா..நான் என் ஆண் வடிவத்தை உனக்குத் தருகிறேன்' என்றான்.

சிகண்டியும்..அதற்கு சம்மதித்து ஆணாக மாறினாள்.

பின் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு..நிகரற்ற வீரனாக திகழ்ந்தாள். பாஞ்சாலத்திற்கு திரும்பச் சென்று..தந்தை..துருபதனை சந்தித்து..நடந்த விஷயங்களைக் கூறி.'இனி பீஷ்மருக்கு பயப்பட வேண்டாம்'என்றாள்.

துருபதனும்..மகிழ்ந்து அவனை(ளை) ஏற்றுக்கொண்டான்.

4 comments:

சந்தர் said...

மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். சற்று அதிகமாக எழுதினால் என் வாழ்நாளில் முழுவதையும் படித்த பயன் ஏற்படும். தயவுசெய்து முயற்சி செய்யுங்கள்.

சிகண்டி திருநங்கை அல்லவா? அல்லது நான் தவறாக புரிந்துக்கொண்டிருக்கீறேனா?

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சுந்தர்..
இதற்கு அடுத்து எழுதப்போகும் இரண்டு அத்தியாயங்களில்..அதிக பாத்திரங்கள் வருவர்.அவை முக்கியமான அத்தியாயங்கள்.ஆகவேதான் , இது சிறியதாக அமைந்து விட்டது.ஒரு பெண் ஆணாக மாறுகிறாள்.அவ்வளவுதான்.சிகண்டியின் ஆதி பிறப்பு பெண் என்பதால்..பீஷ்மர் போரில் அவன்(ள்) மீது அம்பு எய்தவில்லை.

Unknown said...

siganti- ik kadha pathirathi pal oonam knodathga eatrukolla kooduma?

Unknown said...

saguni oonamutravara? eathagaiya oonam kondavar?

Post a Comment