Friday, January 23, 2009

6. அம்பை..அம்பிகை..அம்பாலிகை..

பெரியோர்கள் ஆசியோடு செம்படவப் பெண் சத்தியவதியை அழைத்துக்கொண்டு சந்தனுவிடம் வந்தார் பீஷ்மர்.அவரின் சபதத்தை கேள்விப்பட்டு சந்தனு வருத்தமுற்றான்.பின் மகனுக்கு ஒரு வரம் அளித்தான் "இம்மண்ணுலகில் எவ்வளவு காலம் நீ உயிருடன் இருக்க விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வாழ்வாய்..எமன் உன்னை அணுகமாட்டான்" என்றான்.

சத்தியவதி உண்மையில் சேதி நாட்டு அரசனான உபரிசரஸ் என்னும் மன்னனின் மகள்.செம்படவ அரசனால் வளர்க்கப்பட்டவள்.

சந்தனுவிற்கும்,அவளுக்கும் முதலில் சித்திராங்கதன் என்னும் மகன் பிறந்தான்.பின் விசித்திர வீரியன் பிறந்தான்.சந்தனு மரணம் அடைந்ததும் பீஷ்மர் சித்திராங்கதனை அரசனாக்கினார்.ஒருசமயம் அவன் ..கந்தர்வ நாட்டு அரசனுடன் போர் செய்ய நேர்ந்தது.அந்த கந்தர்வ அரசன் பெயரும் சித்திராங்கதன்" உன் பெயரை மாற்றிக்கொள்" என்றான் கந்தர்வ மன்னன்.:இல்லாவிட்டால் போரிட வா" என சவால் விட்டான்.போரில் சந்தனுவின் மகன் மரணம் அடைந்தான்.

பீஷ்மர் அடுத்து..விசித்திர வீரனை அரசனாக்கினார்.அவனுக்கு மணம் முடிக்க எண்ணினார்.அந்த சமயம் காசி நாட்டு மன்னன் அவனது மூன்று மகளுக்கும் சுயம்வரம் நடத்துவது அறிந்து,பீஷ்மர் காசியை அடைந்தார்.

சுயம்வரத்தில் பல அரசர்கள் கூடியிருந்தனர்.அம்பை,அம்பிகை,அம்பாலிகை என்பது அவர்களது பெயர்.பீஷ்மரின் வயது கண்டு அவர்கள் விலகினர்.சில மன்னர்கள் பீஷ்மரை பார்த்து"நரை கூடிய கிழப்பருவத்தில் திருமண ஆசையா...உன் பிரம்மசரிய விரதம் என்னவாயிற்று" என்று சிரித்தனர்.

பீஷ்மர் கடும் கோபம் அடைந்தார்.மூன்று பெண்களையும் பலவந்தமாக..தேரில் ஏற்றிக்கொண்டு வந்தார்.மன்னர்கள் முறியடிக்கப் பார்த்து தோற்றனர்.

ஆயினும்,சௌபல நாட்டு மன்னன் சால்வன்..கடும் போர் செய்து..தோற்று ஓடினான்.

பின்..பீஷ்மர்..மூன்று பெண்களையும்..தன்..மகள் போல..மருமகள்கள் போல அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் வந்தார்.அப்பெண்களை விசித்திர வீரியனுக்கு திருமணம் செய்யும்..முயற்சியில் ஈடுபட்டார்.அப்போது அப்பெண்களில் மூத்தவள் அம்பை..'என் மனம் சௌபல நாட்டு மன்னன் சால்வனிடம் சென்றுவிட்டது.அவனையே மணாளனாக அடைவேன்'என்றாள்.

உடன் பீஷ்மரும்'பெண்ணே! உன் மனம் அவனை நாடினால்..தடையேதும் இல்லை...இப்பொழுதே நீ அவனிடம் செல்லலாம்'என்றார்.

அம்பையும்..சௌபல நாடு நோக்கி சென்றாள்.

4 comments:

ஸ்வாதி said...

இந்த அம்பை தானே பீஷ்மருக்கே எமனாக வந்தாள்?

ஒரு பெண்ணின் மனதை அறியாமல் தமது பலம், அதிகாரம், அந்தஸ்து போன்றவற்றால் அவளை பலவந்தமாக ஒருவர் அடைய முயற்சித்தால்.... விளவிவுகள் விபரீதமானவை என்பதற்கு அம்பை நல்லதொரு உதாரணம். பீஷ்மர் தனக்காக பெண்களைக் கவர்ந்து வராவிட்டாலும் கூட அந்தச் சூழலில் அந்தப் பெண்களிடம் அபிப்பிராயம் கேட்காதது தவறு தானே?

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களது இரண்டாம் கேள்விக்கான பதில் முதல் கேள்விதான்.
வருகைக்கு நன்றி ஸ்வாதி

ரிஷபன்Meena said...

இத்தனை காதாபாத்திரங்களை ஒன்றாக இனைத்து சொல்லப்பட்ட மஹாபாரதம் நமது பொக்கிஷம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரிஷபன்

Post a Comment