இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன் இவ்வுலகை ஆண்டு வந்தான்.அவனது புண்ணியச் செயல்களால்..அவன் இறந்ததும் தேவலோகம் அடந்தான்.தேவர்களுடன் சேர்ந்து அவன் பிரம்ம தேவரை வணங்கச் சென்றான்..அப்போது கங்கை நதி...கங்காதேவி வடிவில் அங்குத் தோன்றினாள்.
கங்காதேவியின் ஆடை காற்றில் சற்றே விலக..அதைக்கண்ட தேவர்களும்..ரிஷிகளும்..நாணத்தால் தலைக் குனிய..மோக வயப்பட்ட மகாபிஷக் மட்டும்.. அவளையே சற்றும் நாணமின்றி நோக்கினான்.
இச்சம்பவத்தால்..கடும் கோபம் அடைந்த பிரம்மன்..மகாபிஷக்கை 'பூ உலகில் மனிதனாகப் பிறந்து..கங்காதேவியால் விருப்பத்தகாத சிலவற்றை சந்தித்து..துன்புற்றுப் பின் சில வருஷங்கள் கழித்து..நல்லுலகை அடைவாயாக'என சபித்தார்.
பின் அவன் பிரதீப மன்னனின் மகனாகப் பிறந்தான்.
பிரம்மதேவர் அவையில் தன்னை நோக்கிய மகாபிஷக்கை கங்காதேவியும் கண்டு காதல் கொண்டாள்.அவள் திரும்பி வரும்போது..அஷ்ட வசுக்களை சந்தித்தாள்.அவர்கள் மனக்கவலையில் இருந்தனர்.
'தேவி..வசிஷ்டருக்கு சினம் வரும்படி நடந்துக் கொண்டதால் அவர் எங்களை மனிதர்களாக பிறக்க சபித்து விட்டார்.ஆகவே..எங்களுக்கு பூமியில் நீங்கள் தாயாகி எங்களை பெற்றெடுக்க வேண்டும்'என வேண்டினர்.
'உங்களை மண்ணுலகில் பெற்றெடுக்க நான் தயார்..ஆனால்..அதற்கு நீங்கள் விரும்பும் தந்தை யார்' என கங்காதேவி கேட்டாள்.
'தாயே! பிரதீப மன்னன் மண்ணுலகில் புகழுடன் திகழ்கிறான்.அவனுக்கு சந்தனு என்ற மகன் பிறந்து..நாடாளப்போகிறான்.அவனே எங்கள் தந்தையாக விரும்புகிறோம்.'என்றனர் வசுக்கள்.
இதைக்கேட்டு..கங்காதேவியும் மகிழ்ந்தாள்.
மீண்டும்..வசுக்கள்..'வசிஷ்டரின் சாபம் நீண்டகாலம் கூடாது..ஆகவே நாங்கள் பிறந்ததும்..உடனே எங்களை தண்ணீரில் எறிந்து..ஆயுளை முடித்து விட வேண்டும்' என்றனர்.
'உங்கள் கோரிக்கைக்கு ஒரு நிபந்தனை..புத்திரப்பேறு கருதி..ஒரு மகனை மன்னரிடம் விட்டுவிட்டு..மற்றவர்களை...நீங்கள் சொல்வது போல செய்கிறேன்' என வாக்களித்தாள் கங்கை.
வசுக்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.
(தொடரும்)
Monday, January 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் பதிவு. தங்களுக்கு நன்றிகள்
அய்யா கதை சொல்லும் போது கொஞ்சம் மர்மமும் நீடிக்க வேண்டும், மகாபாரத்தில் கூட கங்கை அஷ்டவசுக்களை கொல்லும் போது(கங்கையில் எறியும் போது சொல்லவில்லை,தேவவிரதனை எறியும் போது சந்தனு தடுக்கும் போதுதான் உண்மையைக் கூறிச் சென்றால், நீங்கள் எழுதும் போதும் அதுபோல எழுதினால் படிப்பவர்களுக்கு ஆர்வம் கூடும். பாரதத்தில் பல சம்பவங்களுக்கு அதன் காரணமும் விளக்கமும் பின்னால்தான் சொல்லுவார்கள். நீங்களும் அதுபோல எழுதினால் ஸ்வாஸ்யம் கூடும். இது என் சிறு விண்ணப்பம். நன்றி.
வருகைக்கு நன்றி RUDRA
எளிய நடையில் சொல்லவேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். வருகைக்கு நன்றி
பித்தனின் வாக்கு
Post a Comment