பிஷ்மர்,துரோணர்,ஜயத்ரதன் ஆகியோர் வீழ்ச்சிக்குப் பின் கௌரவர் படை கலகலத்தது.துரியோதனனின் தம்பியர் பலர்,உதவிக்கு வந்த அரசர்கள் பலர் கொல்லப்பட்டனர்.ஆயினும்..துரியோதனன் மாறவில்லை.எப்படியாவது பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்றே குறியாய் இருந்தான்.அசுவத்தாமன் ஆலோசனைப் பேரில் கர்ணன் தளபதியாக நியமிக்கப் பட்டான்.
போர் தொடங்கும் போது மகர வியூகம் அமைத்தான் கர்ணன்.திருஷ்டத்துய்மன் அர்த்த சந்திர வியூகம் அமைத்தான்.போர் ஆரம்பித்தது.முதலில் நகுலனை எளிதில் வென்றிடலாம்..என கர்ணன் அவனுடன் போரிட்டான்.எழுபத்து மூன்று அம்புகளை அவன் மீது செலுத்தினான்.அவன் வில்லை ஒடித்தான்.தேரை அழித்தான்.வாளை துணித்தான் .கேடயத்தைச் சிதைத்தான்.கதையைப் பொடியாக்கினான்.அவன் நகுலனை எளிதாகக் கொன்றிருப்பான்..ஆனால் தாய் குந்திக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அவனை கொல்லாது விடுத்தான்.ஒரு புறம் கிருபருக்கும்..திருஷ்டத்துய்மனுக்கும் கடும் போர் மூண்டது.கிருதவர்மா சிகண்டியைத் திணற அடித்தான்.அர்ச்சுனன் பலரைவீழ்த்தினான்.
துரியோதனனுக்கும் தருமருக்கும் போர் மூண்டது.தருமர் அவன் தேரை அழித்தார்.வில்லை முறித்தார்..தமது சக்தி ஆயுதத்தால் துரியோதனனின் உடம்பெங்கும் புண்ணாக்கினார்.பின் ஒரு அம்பை எடுத்து அவன் மீது எய்தார். அச்சமயம்..துரியோதனனைக் கொல்வேன் என்ற பீமன் சபதம் ஞாபகம் வர..அதை திரும்பிப் பெற்றார்.ஆகவே அன்று அவன் தப்பித்தான்.அன்றைய போர் அத்துடன் முடிந்தது.அனைவரும் பாசறைக்குத் திரும்பினர்.
கர்ணனின் செயல் துரியோதனனை வருத்தியது.அவன் நகுலனையாவது கொன்றிருக்கலாம் என எண்ணினான்.கர்ணனிடம் சென்று..தன் வாழ்வு அவனிடம்தான் இருப்பதாகக் கூறி..எப்படியேனும் அடுத்த நாள் அர்ச்சுனனை போர்க்களத்தில் கொன்றுவிடுமாறு கேட்டுக் கொண்டான்.
கர்ணன் மனம் திறந்து துரியோதனனுடன் பேசினான்.'பல விதங்களில் நான் அர்ச்சுனனைவிட ஆற்றல் மிக்கவன்.அம்பு எய்வதில் அவன் என்னைவிட சிறந்தவன் அல்ல.விஜயம் என்னும் எனது வில் சக்தி வாய்ந்தது.இந்த வில்லால்தான் இந்திரன் அசுரர்களை மாய்த்தான்.தெய்வத்தன்மை வாய்ந்த இந்த வில்லை இந்திரன் பரசுராமருக்குக் கொடுத்தான்.பரசுராமன் எனக்கு அளித்தார்.அர்ச்சுனனிடம் இரண்டு அம்புறாத் தூணிகள் உள்ளன..அவை போன்றவை என்னிடம் இல்லை.எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு கண்ணன் தேர் ஓட்டுகிறான்.அத்தகைய சாரதி எனக்கு இல்லை.ஆயினும்..சல்லியன் என் தேரை ஓட்டுவானானால்..நான் நிச்சயம் அர்ச்சுனனைத் தோற்கடிப்பேன்" என்றான்.
துரியோதனன் உடன் சல்லியனிடம் சென்று..'நீர் தேரை ஓட்டுவதில் கண்ணனைவிட சிறந்தவர்..ஆகவே கர்ணனுக்கு தேரோட்டியாய் இருந்து தனக்கு வெற்றியை பெற்றுத் தர வேண்டும்' என வேண்டினான்.
சல்லியன் ஒரு நிபந்தனையுடன் கண்ணனின் தேரைச் செலுத்தச் சம்மதித்தான்.போரில் கர்ணன் தவறிழைத்தால் தனக்கு அவனை கண்டிக்கும் உரிமைவேண்டும்..என்பதே நிபந்தனை.துரியோதனன் அந்த நிபந்தனையை ஏற்றான்.
Wednesday, October 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தாங்கள் இந்த தொடரை எழுதுவது எனக்கு தெரியாது, இன்றுதான் பார்த்தேன். இனி தொடந்து படிக்கின்றேன். பழைய பதிவுகளையும் படிக்கின்றேன். நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
தங்களின் அனைத்து பாரத பதிவுகளையும் ஒரு நாளில் படித்து விட்டேன். பதினேழாவது மற்றும் பதினேட்டாம் நாள் பேருக்காக காத்துள்ளேன். விரைவில் எழுதுங்கள். நன்றி.
வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு
Post a Comment