Tuesday, October 6, 2009

67-பதினொன்றாம் நாள் போர்

துரோண பருவம்

பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.பீஷ்மர் வீழ்ச்சிக்குப் பின் யார் தலைமை ஏற்று போர் தொடர்வது என்ற சிந்தனை எழுந்தது.துரோணர் தளபதியாக
நியமிக்கப்பட்டார்.அவரிடம்..துரியோதனன்'எப்படியாவது தருமரை உயிருடன் பிடித்து என்னிடம் ஒப்படையுங்கள்'என வேண்டினான்.

தருமரை உயிருடன் பிடித்து விட்டால்..அவரை மீண்டும் சூதாட வைத்து..தோற்கடித்து..ஆயுட்காலம் முழுதும் வனவாசம் என்று அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன்.

இந்த் செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களை எட்டியது.அதனால்..தருமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.துரோணர் சகட வியூகம் வகுத்தார்..பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர்.

அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது.அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான்.துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் தருமர் மீதே குறியாக இருந்தார்.இதை உணர்ந்து அர்ச்சுனன் தருமர் அருகே வந்தான்.பீமனும் தருமரை காப்பதில் ஈடுபட்டான்.

அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.அவன் துரியோதனனின் மகன் லட்சுமணனைத் தாக்கி அவனைப் பிடித்துத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு திரும்பினான்.இதனை அறிந்த சல்லியன் அபிமன்யூவைத் தடுத்து நிறுத்திப் போரிட்டான்.சல்லியனின் வில்லையும் தேரையும் முறித்தான் அபிமன்யூ.

அர்ச்சுனனின் தாக்குதலைத் துரோணரால் சமாளிக்க முடியவில்லை.கௌரவர்கள் நடுங்க ஆரம்பித்தனர்.துரோணரும் சோர்ந்து போனார்.இந்நிலையில் சூரியன் மறைந்தான்.போர் நின்றது.

4 comments:

Karthikeyan said...

மிக அருமையாக எழுதி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. ஆச்சாரியாரின் வியாசர் விருந்தினை இன்னும் அழகாக படித்தது போல இருந்தது. ஒரு சிறு விண்ணப்பம்.. கடோற்கஜனின் வாழ்க்கை வரலாறினை எங்கும் படித்தறியேன்.. குறையினை நிவர்த்திக்க வேண்டும். அதேபோல அபிமன்யூவின் தனித்திறன் மற்றும் போர்முறைகளையும் விபரமாக எழுத வேண்டுகிறேன்.
தீபாவளி வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஐயா..
இத் தொடர் முடிந்ததுமோ..அல்லது இடைக்காலத்திலோ..இரண்டிற்கும் எழுதுகிறேன்

மாதேவி said...

விரிவாக எழுதியுள்ளீர்கள்.நன்றாக உள்ளது.

மகாபாரதம் ஒளி நாடகம் சிடியில் விரும்பிப் பார்த்திருக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மாதேவி

Post a Comment