பார்வதி-மூப்பையும்..மரணத்தையும் விலக்குவது எப்படி?
ஈஸ்வரன்-பிறப்பே இல்லாதிருக்குமாயின் முதுமை இல்லை..மரணமும் இல்லை.இதற்கு ஒரே வழி முக்தி ஒன்றுதான்.தானத்தாலோ,தவத்தாலோ,முதுமையை,மரணத்தைத் தடுக்க முடியாது.முக்தி பெற்ற உயிர் மீண்டும் பிறப்பதில்லை.பிறப்பில்லையெனில் மூப்பு முதலான வியாதி களும் இல்லை,மரணமும் இல்லை.
தனம்,தானம்,ஞானம், பிற நல்ல ஒழுக்கங்கள் அனத்தும் நன்மை தரத்தக்கதுதான்.எனினும் இவற்றாலும் மரணத்தைத் தடுக்க முடியாது.ஆகவே மரணத்தை தடுக்கும் முக்திக்கு உரிய வழிகளை ஒவ்வொரு உயிரும் நாட வேண்டும்.முதுமையையும்,மரணத்தையும் தடுக்கும் வழி முக்தி ஒன்றுதான் எனத் தெளிதல் வேண்டும்.உலகில் எத்தகைய நிலையில் இருப்பாராயினும் சரி, அரசராகவோ,மாபெரும் அறிஞராகவோ, முனிவராகவோ, அனைவரையும் காலம் அவர்களுக்கு உரிய நேரம் வரும் போது மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிரது.ஒவ்வொரு நாளும்..ஏண்..ஒவ்வொரு வினாடியும் நம் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறது.காலம்,,..இதன் பிடியிலிருந்து எந்த உயிரினமும் தப்பிக்க முடியாது.மனிதன் விழிப்புடன் இருக்கிறானோ இல்லையோ அவனுக்காக விதிக்கப்பட்ட ஆயுட் காலத்தை முடிப்பதற்கு மரணம் விழிப்புடன் இருக்கிறது.
ஆதலால் செய்ய வேண்டிய நற்காரியங்களை உடனே செய்து முடிக்க வேண்டும்.நாளை செய்ய நினைத்ததை இன்றே..இன்று செய்ய நினைத்ததை இப்பவே செய்துவிட வேண்டும்.இப்போது மழையாக உள்ளது..இப்போது வெயிலாக உள்ளது..இப்போது குளிராக உள்ளது, பிறகு பார்க்கலாம் என்று இருக்கக் கூடாது.இது வேண்டும்..அது வேண்டும் என்று பொருளை நாடித் திரியும் போதே மனிதன் மரணத்தை நெருங்குகிறான்.நரை கூடிக் கிழப் பருவம் அடையும் முன்..இளமை கழியும் முன்னரே மரணம் வரக்கூடும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.
மனைவி,மக்கள்,உற்றார்,உறவினர் அனைவராலும் ஒருவனை மரணத்தினின்று காப்பாற்ற முடியாது.இவர்கள் அனைவருமே ஒரு நாள் மரணத்தைத் தழுவ வேண்டும்.இந்நிலையில் யாருக்கு யார் துணை?நல்லறங்களைச் செய்து அசையாத ஒழுக்கத்தை மேற்கொண்டு ஆத்மத் தியானத்திலேயே திளைத்து முக்தி அடைதல் ஒன்றே மரணத்தை வெல்லும் வழியாகும்.
No comments:
Post a Comment