Monday, March 30, 2015

மகாபாரதக் கதைகள் - 4 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாது



போரில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை, விதுரர்,தௌமியர்,யுயுத்சு ஆகியோர் தர்மர் கூறியபடிக்கு ஏற்பாடு செய்தனர்.ஆதரவற்றவர்களுக்காக தருமர் தர்ப்பணம் செய்தார்.

அப்போது குந்திதேவி அங்கு வந்தாள். அவள், தேரோட்டி மகன் என இகழப்பட்டவனும், துரியோதனனின் நம்பிக்கைக்கு ஏற்றவனாகத் திகழ்ந்தவனுமாகிய , அர்ச்சுனனால் போரில் கொல்லப்பட்ட கர்ணன் பாண்டவர்கள் ஐவருக்கும் மூத்தவன் என்றும், தனக்கு சூரியனின் அருளால் பிறந்த மகன் என்றும் கூறினாள்.

தாயின் கூற்றைக் கேட்ட பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.பின் தருமர் தாயினிடம் "வீரர்களில் சிறந்தவனும், ஒளிமிக்கவனுமான கர்ணன் மூத்தவன் என்ற உண்மையை மறைத்ததால் ஏற்பட்ட விளைவுகளை நீங்கள் அறிவீர்களா?" என்றார்.பாஞ்சாலர்களையும், அபிமன்யூவையும் இழந்த துக்கத்தை விட அதிக துக்கம் அடைந்துள்ளதாகக் கூறினார்.இவ்வளவு நாள் இந்த ரகசியத்தை ஏன் மறைத்தீர்கள்?என்றார்.

பின் கர்ணனின் மனைவியுடன் அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்தார் தருமர்.

பின், "இனி எந்த ரகசியமும் பெண்களிடம் தங்கலாகாது" என்றார் உள்ளக் கொதிப்புடன் '

No comments:

Post a Comment