Tuesday, June 9, 2009

44 - யட்சன் கேள்வியும்..தருமர் பதிலும்

யட்சன்- சூரியனை உதிக்கச் செய்வது யார்?

தருமர்-பிரம்மா

சூரியன் எதில் நிலைத்து நிற்கிறான்

சத்தியத்தில்

ஒருவன் எதனால் சிறப்படைகிறான்

மன உறுதியால்

சாதுக்களின் தருமம் எது

தவம்

உழவர்களுக்கு எது முக்கியம்

மழை

விதைப்பதற்கு எது சிறந்தது

நல்ல விதை

பூமியைவிட பொறுமை மிக்கவர் யார்

தாய்

வானினும் உயர்ந்தவர் யார்

தந்தை

காற்றினும் விரைந்து செல்லக்கூடியது எது

மனம்

புல்லைவிட அதிகமானது எது

கவலை

ஒரு மனிதனுக்கு உயிர் போன்றவர் யார்

மகன்

மனிதனுக்கு தெய்வத்தால் கிடைத்த நன்மை எது

மனைவி

ஒருவன் விட வேண்டியது எதனை

தற்பெருமையை

யார் உயிர் அற்றவன்

வறுமையாளன்

எது தவம்

மன அடக்கம்

பொறுமை என்பது எது

இன்ப துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்

உயர்ந்தோர் என்பவர் யார்

நல்லொழுக்கம் உடையவர்

மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்

கடன் வாங்காதவர்

தூங்கும் போது கண்களை மூடாமல் இருப்பது எது

மீன்

(மேலும் கேள்வி பதில்கள் அடுத்த பதிவில்)

8 comments:

கோவி.கண்ணன் said...

//மனிதனுக்கு தெய்வத்தால் கிடைத்த நன்மை எது

மனைவி//

மனிதன் என்றாலே ஆண் வர்க்கம் மட்டும் தானா ? மகாபாரதத்தில் அந்தக்காலத்தினரின் மனநிலை தெரிகிறது.

dondu(#11168674346665545885) said...

இது பற்றி நான் பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/08/blog-post_3171.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தூங்கும் போது கண்களை மூடாமல் இருப்பது எது

மீன்
//

இந்த கேள்வி பதில் வரிசையில் இதற்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா சார்..,

bala said...

யட்சன் கேள்வி: குடும்பத்துக்காக எவ்வளவு சொத்து சேர்த்தால் மஞ்ச துண்டு திருப்தி அடையும்?

தருமன் அய்யா ஸ்டம்ப்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

இது யட்சன் தருமரிடம் கேட்ட கேள்விகள்..இனி வரும் கேள்விகளிலும் இது போன்றவை உண்டு சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

படித்தேன் டோண்டுசார்
வருகைக்கு நன்றி

Post a Comment