Thursday, November 19, 2009

77-அஸ்வத்தாமனின் அடாத செயல்

தொடைகள் முறிந்ததால் நகர முடியாது துரியோதனன் துயரமுற்றான்.தான் அணு அணுவாக செத்துக் கொண்டிருப்பதை அறிந்தான்.அப்போது கிருபர்,கிருதவர்மா,அஸ்வத்தாமா ஆகியோர் அவனைக் கண்டு வேதனைப் பட்டனர்...அவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் பொழுது விடிவதற்குள் பாண்டவர்களை கொன்று வருவேன் என அஸ்வத்தாமன் கூறினான்.சாகும் நிலையில் இருந்தும் துரியோதனன் மனம் மாறவில்லை.அஸ்வத்தாமனுக்கு ஆசி வழங்கி அவனை தளபதி ஆக்கினான்.

பாண்டவர் பாசறை நோக்கிச் சென்ற மூவரும் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.அந்த மரத்தில் இருந்த பல காகங்களை ஒரு கோட்டான் கொன்றதை அஸ்வத்தாமன் கவனித்தான்.அதுபோல உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும்..பாஞ்சாலியையும் கொல்ல வேண்டும் எனக் கருதினான்.ஆனால் கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை.

ஆனால் அஸ்வத்தாமன் பாண்டவர் பாசறையில் நுழைந்தான்.அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.அவன் திரௌபதியிம் புதல்வர்களான உபபாண்டவர்களைக் கொன்றான்,தன் தந்தையைக் கொன்ற திருஷ்டத்துய்மனைக் கொன்றான்.சிகண்டியையும் கொன்றான்.அப்போது பாண்டவர்களும்,கண்ணனும் அங்கு இல்லை.அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான்.பின் அவன் உயிர் பிரிந்தது.வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை.

செய்தி அறிந்து பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தன் மைந்தர்கள் மாண்டு கிடப்பதைக் கண்ட பாஞ்சாலி மயங்கினாள்.அஸ்வத்தாமனை யாராலும் கொல்ல முடியாது என அவள் அறிவாள்.'அவன் தலையில் அணிந்திருக்கும் மணியைக் கவர்ந்து அவனை அவமானப் படுத்த வேண்டும்..இல்லையேல் பட்டினி கிடந்து இறப்பேன்' என சூளுரைத்தாள்.

உடன் பீமன் தேரில் ஏறி கிளம்பினான்.

அவனை எளிதில் பிடிக்க முடியாது என்பதால் கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.கங்கைக் கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனைக் கண்டனர்.பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான்.அஸ்வத்தாமன் பிரமாஸ்திரத்தை செலுத்த..அர்ச்சுனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான்.இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும்,நாரதரும் உலகைக் காக்க நினைத்தனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ச்சுனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான்.

ஆனால் அஸ்வத்தாமனுக்கு..திரும்ப அழைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை.அந்த அஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும்.அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி'பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும்;' என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான்.ஆனால் கண்ணனின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது.

சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கண்ணன் பழித்தார்.தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான்.'அறிவிலியே..நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டுக் காட்டில் தன்னந்தனியாய்ப் பல ஆயிரம் ஆண்டுகள் தவிப்பாயாக' என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர்.

உத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்றும் கூறினார்.சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்குச் சென்றான்.பாசறைக்குத் திரும்பிய கண்ணனும்,பீமனும்,அர்ச்சுனனும் திரௌபதியிடம் அஸ்வத்தாமனின் மணியைக் கொடுத்து ஆறுதல் கூறினர்.

(சௌப்திக பருவம் முற்றும்)

3 comments:

பித்தனின் வாக்கு said...

நன்று அய்யா, இளம் பஞ்ச பாண்டவர் தலைகளை பாண்டவர் என வெட்டி எடுத்து துரியோதனிடம் காட்டியதாகவும், அது இளம் பாண்டவர் தலை என அறிந்த துரியோதனன் அஸ்வத்தாமனை திட்டித், தனது முகத்தில் முழிக்க வேண்டாம் எனக் கூறி இறந்ததாகவும் கூறப்படுகின்றது. துரியோதனன் திட்டிய பிறகு மனமுடைந்து வியாசரின் ஆசிரம் சென்றதாக கேள்விப் பட்டேன். இது இடைச் சொருகல் ஆக இருக்குமே.

நல்ல கதை, நல்ல முறையில் பாரதப் பேர் முடிந்தது, நன்றி, அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன்.

Anonymous said...

This gurushetra war has happened b'coz of 2 ladies.Bleady guntidevi and the bitch paanchali.everywhere everything bad things happened bcoz of these type of ladies.particularly like paanchali.And this guy viyasar is not an good guy.if he is a common man for all means,why he not able to stop this war.he always supporting only to pandavas.This son of bitch viyasar is the father of all these guys.but why he always sees partiality between his childs.Even though he is a sadhu.ashame of him.am not supporting gauravas.but if see who is the reason for all means,these 3 persons.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பித்தனின் வாக்கு
love

Post a Comment