இன்றுடன் "மகாபாரதம்"பதிவு முடிவடைகிறது.
.முகநூலில் தொடர்ந்து 190 அத்தியாயங்கள் வேறு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை.இச்சாதனையை நடத்த ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
மாகாபாரதம் உணர்த்தும் செய்திகள்..
எத்தகையோரும் சில நேரங்களில் அறிந்தோ..அறியாமலோ தவறுகள் செய்யக் கூடும்.ஆனாலும் ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பதை தருமரின் வாழ்க்கை மூலம் அறியலாம்.'தருமம் வெற்றி பெறும்' என்பதே மகாபாரதம் சொல்லும் நீதி எனலாம்.ஆயினும் தருமத்தின் வெற்றி அவ்வளவு எளிதல்ல.இந்த உண்மையை உணர்த்தச் சான்றோர் எவ்வளவோ துன்பத்தை பொறுத்திருக்க வேண்டும்.எவ்வளவோ தியாகங்கள் செய்ய வேண்டும் என்னும் செய்திகளையும் மகாபாரதம் உணர்த்துகிறது.இன்ப துன்பங்கள் ஞானிகளை ஒன்றும் செய்ய முடியாது என்பதும் மனிதர்களை அவை ஆட்டிப்படைக்கின்றன என்பதும் மகாபாரதம் உணர்த்தும் செய்திகளாம்..
இனி என்னுரை..
எண்ணற்ற பாத்திரங்களைக் கொண்ட மகாபாரதத்தை எளிய நடையில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எழுத வேண்டும் என எண்ணினேன்.கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் ..எந்ததவறும் வந்துவிடக்கூடாதே என் அபலமுறை படித்து..அவற்றை எளிமைப்படுத்தி எழுதினேன்.நண்பர் கே என் சிவராமன்,தி.முருகன் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தினால் இது, "மினியேச்சர் மகாபாரதம்" எனும் நூலாக சூரியன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டு பல பத்திரிகைகளின் பாராட்டுகளும்,படித்தோரிடம் இருந்து வாழ்த்துகளும் பெற்றேன். முகநூல் நண்பர்கள் படிக்க . 190 பகுதிகளில் எழுதியுள்ளேன்.மகாபாரதப் போருக்குப் பின் நடந்தவைகளை பலர் அறியமாட்டார்கள்.ஆகவே அதையும் எழுத வேண்டும் என எண்ணினேன்.என் பணி முடிந்தது.
நான் முதலிலேயே குறிப்பிட்டபடி..இதை நம்பியவர்களும்..சரி..நம்பாதவர்களும் சரி இதிலுள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப ஒத்துழைப்புக் கொடுத்தமைக்கு நன்றி.
இம் மாபெரும் செயலை முடிக்க எனக்கு உறுதுணையாய் இருந்தது..ராஜாஜி அவர்கள், வாரியார் அவர்கள்,ஸ்ரீசந்திரன் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள்.அவர்களுக்கு நன்றி.
(மகாபாரதம் முற்றும்)
9 comments:
தங்களுடைய இந்த மாபெரும் இதிகாச தொடருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
தங்கள் செயல் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ***மிக்கநன்றி***
WHAT NEXT PLZ WRITE SRIMAT BHAVATHAM
மிகவும் அருமையாக எழுதி மகாபாரதத்தின் நெறியை ஓரளவுக்கு புரிந்து கொள்ள உதவியுள்ளீர்கள்.
மிக்க நன்றி.
balukumar
திரு ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,
தங்களின் எழுத்தில் உள்ள மாகாபாரத உரையை பலருக்கும் அறியத்தரும் முயற்சியாக
PDF பார்மேட்டில் மாற்றி வெளியிட நினைக்கின்றேன். உங்கள் பதில் தேவை.
அருமையான பதிவு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் போஸ்ட்
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் போஸ்ட்
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
மிகவும் அற்புதமான கடின உழைப்பு ..
மிக்க நன்றி நண்பரே
இன்று தான் உங்கள் பதிவுகளை பார்த்தேன்.. மிக கடின உழைப்பாக தெரிகிறது. அனைத்தையும் படித்து பின்னூட்டம் இடுகிறேன்..
மகாபாரதம் ஒரு தெவிட்டா இன்பம்! நானும் சில பாத்திரங்கள் குறித்து எழுதியிருக்கிறேன். ஆனாலும், உங்கள் அளவு உழைப்பு மலைக்க வைக்கிறது!
Post a Comment